ஒளி அரசி பெப்ரவரி மாத சஞ்சிகை பற்றிய ஒரு கண்ணோட்டம்
வர்ணமயமான அட்டைகளுடன் பார்த்ததும் வாசிக்கத்தூண்டும் வகையில் இந்திய சஞ்சிகைககளே பெரும்பாலும் காணப்படுகின்றன. நம் நாட்டவர்களாலும் அப்படியானதொரு ஜனரஞ்சகமான சஞ்சிகையைக் கொண்டு வர முடியும் என்பதைப் பிரதிபலிப்பதாகவே பல வர்ணங்களுடன் கூடிய அட்டைப் படத்துடனும், வண்ணமயமான பக்கங்களிலும் பல சுவாரஸ்ய விடயங்களை உள்ளடக்கியதாக இல்லத்தரசிகளின் தோழியாக ஒளி அரசி சஞ்சிகையின் மூன்றாவது இதழ் 60 பக்கங்களில் வெளிவந்துள்ளது.
பெரியவர்களும், முன்பள்ளி மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் என்று பல்வேறு தரப்பினரும் வாசித்து பயனடையக் கூடிய விதத்தில் மாதாந்த இதழாக வெளிவரும் ஒளி அரசி, இதுவரை மூன்று இதழ்களைக் கொண்டுவந்திருப்பது பாராட்டத்தக்கது. கல்வி, அறிவியல், சினிமா, குறுக்கெழுத்துப் போட்டி, மருத்துவம், இலக்கியம், விளையாட்டு, நகைச்சுவை போன்ற பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கி மொத்தமாக ஒரே பார்வையில் வாசிக்கக் கூடியதாக இந்தச் சஞ்சிகையை வெளிவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தற்காலத்தில் பல்வேறு வகையான சஞ்சிகைகள் வெளிவருவது நாம் அறிந்ததே. ஆனால் பல்சுவை அம்சங்களைக் கொண்ட இவ்வகையான சஞ்சிகைகளை நாம் காண்பது அரிதாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் இச்சஞ்சிகை அதற்குரிய வெற்றிடத்தை சிறப்பாகப் பூரணப்படுத்துகிறது என்று துணிந்து சொல்லாம்.
இந்த இதழில் நட்சத்திர இல்லத்தரசி என்ற மகுடத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களுடனான நேர்காணல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆர். ராஜலிங்கத்தின் ஷகாதலி தேடிக் கொடுத்த மனைவி| என்ற தொடர்கதையின் பகுதியையும் காணமுடிகிறது.
சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் ஹாஜியானி ஹபீறா சலீம் அவர்கள் பாகுபாடின்றி மாணவர் சமூகத்திற்கு உழைத்ததால் கிடைத்த கௌரவமே அதிபர் பதவி என்று தனது நேர்காணல் மூலம் மனந்திறக்கின்றார். கிழக்கு பல்கலைக்கழக மாணவி செல்வி ரம்யா உதயகுமாரின் பாரதீ குறுந்திரைப்படம் பற்றிய விமர்சனத்தையும் காணலாம். காதலர் தின சிறப்புக் கவிதைகளும் இந்த இதழை அலங்கரித்திருக்கின்றன.
இவ்வாறாக அனைத்து தரப்பினரும் வாசித்து பயன்பெறக்கூடிய வகையில் ஒளி அரசி இதழின் பெப்ரவரி மாதத்துக்கான இதழ் வெளிவந்துள்ளது. ஒளி அரசிக்கு எனது வாழ்த்துக்கள்!!!
சஞ்சிகை - ஒளி அரசி
விலை - 60 ரூபாய்
முகவரி - 85, ஜயந்த மல்லிமாரச்சி மாவத்தை, கொழும்பு 14.
தொலைபேசி - 0115738003, 0115738855
மின்னஞ்சல் - oliarazi33@gmail.com

No comments:
Post a Comment