Wednesday, April 29, 2015

84. ‘‘தாலாட்டு’’ நூல் பற்றிய இரசனைக் குறிப்பு

‘‘தாலாட்டு’’ நூல் பற்றிய இரசனைக் குறிப்பு

கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும்ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்டவர் மருதூரஜமால்தீன். இலக்கிய உலகில் மரபுக் கவிதைகள் மற்றும் உருவகக் கதைகளை எழுதுவதில் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்துக்கொண்டவர்;. எம்.எம். ஜமால்தீன் (முஅய்யதி) என்ற இயற்பெயரை உடைய இவர; 15ஆண்டுகளாக வாளிப்பா ஜும்ஆப் பள்ளி வாசலில் பேஷ் இமாமாகக் கடமையாற்றி வருபவர்;.

புரவலர் புத்தகப் பூங்காவின் 10 ஆவது நூல் வெளியீடாக இவரது முதலாவது கவிதைத் தொகுதியான தடயங்கள் 2009 மே மாதத்தில் வெளிவந்தது. அதனைத் தொடர;ந்து இதுவரை மொத்தமாக 06 நூல்களை வெளியிட்டுள்ளார்;. தடயங்கள்ரமழான் ஸலவாத்கிழக்கின் பெருவௌ;ளக் காவியம்முஹம்மது (ஸல்) புகழ் மாலைஇஸ்லாமிய கீதங்கள்தாலாட்டு ஆகிய ஆறு நூல்களே அவையாகும்.

இவரது இலக்கியப் பணிகளுக்காக 2008 ஆம் ஆண்டு அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் சாமஸ்ரீ (சமூக ஜோதி) பட்டமும்> 2013 ஆம் ஆண்டு அகில இலங்கை கவிஞர்;கள் சம்மேளனத்தினால் காவிய பிரதீப (கவிச்சுடர்;) பட்டமும்விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்;.

ஒரு தாயின் தாலாட்டில் குழந்தையின் அழுகை தீர;ந்துவிடுகின்றது. அடம்பிடித்து விழித்திருக்கும் குழந்தையை ஆசுவாசப்படுத்தி சுகமான தூக்கத்தை அளிப்பது தாலாட்டாகும். ஒரு குழந்தை முதன்முதலாக சங்கீதமாகக் கேட்பதும் தாலாட்டையே ஆகும். தாலாட்டுப் பாடல்களைக் கொண்டே இந்த நூலை ஆக்கியிருக்கும் கவிஞர்குழந்தைகளுக்கான நற்பண்புகள்நல்லொழுக்கங்கள் போன்றவற்றையும் தாலாட்டினூடாகவே தந்திருக்கின்றமை சிறப்பாகும்.

தாலாட்டு என்ற இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள கலாபூஷணம் எஸ். முத்துமீரான் அவர;கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்;.

‘‘வாழ்வின் தத்துவங்களையும்வரலாறுகளையும்சூட்சுமங்களையும் உலகில் சிறப்பாகவும்யதார்;த்தமாகவும் எடுத்தோதிக் கொண்டிருக்கும் படைப்பிலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியங்களே முன்னிலை வகிக்கின்றன. நாட்டுப்புற இலக்கியங்கள்கலப்பில்லாததூய்மையான உண்மையின் பிம்பங்களாகும். அதிலும் அன்புக் கொடைகளில் விலைமதிப்பற்ற  கொடையென நாட்டுப்புற ஆய்வாளர்;கள் அறுதியிட்டுக் கூறியுள்ளனர்;. நெடிலோசை வடிவில் தாய்மார்;களினால் தங்கள் சேய்களை கண்மூடித் தூங்கச் செய்யும் இத்தாலாட்டுப் பாடல்கள் மூலம் பல வடிவங்களில் பாடப்பட்டிருந்தாலும் இதன் உண்மையான நோக்கம் குழந்தைகள் அமைதியாகத் தூங்கச் செய்வதேயாகும்.’’

தாலாட்டு என்ற இந்தத் தொகுதியில் 107 பாடலடிகள் அமையப் பெற்றுள்ளன.

பக்கம் 02 இல் உள்ள தாலாட்டு அடிகளில் இப்பூமியில் சிறப்பாக வாழ்வதற்குரிய வழிவகைகளை சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கின்றார்;. படைத்த இறைவனின் அருளைப் பெற்று பார;போற்றும் நல்லவனாக வாழ வேண்டுமென்றும்கலங்கரை விளக்கான கல்வியை நாட்டத்துடன் கற்று உயர்;ந்த தொழில் புரிய வேண்டும் என்றும் கூறி நிற்கின்றார்;. அத்துடன் உயிருக்கும் மேலான ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்வது அவசியம் என்றும் குறிப்பிடுகின்றார்;. இறைவனின் சிந்தனை அற்றவர்;கள் பாவம் செய்வதற்குரிய சந்தர்;ப்பங்கள் அதிகமாகும். பாவம் செய்பவர்;களுக்கு நல்ல விடயங்களின்பால் ஈடுபாடு இருக்காது. கல்வியும்ஒழுக்கமும் எட்டாக் கனியாகவே ஆகிவிடும். எனவே முதலில் அவற்றில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆராரோ என் மகனே
ஆராய்ந்திவ் வுலகமிதில்
சீராய் இப்பு+மியிலே
சிறப்பாக நீ வளர;வாய்

வல்லோனருளாலே
வந்தாய் இவ்வுலகமதில்
நல்லோருதவி பெற்று
நல்லபடி நீ வளர;வாய்

கல்வியறிவைக் கற்று
கருத்தாய் ஒழுக்கமுடன்
எல்லோரும் போற்றிடவே
என் கண்ணே நீ வளர்;வாய்

ஒழுக்கம் தனை மேலாய்
உழுகிப் பணிவுடனே
அழுக்கான தீமை விட்டு
அனுதினமும் நீ வளர;வாய்

பக்கம் 07 இல் உள்ள அடிகளில் முதியோருக்கு உதவுதல்ஆசிரியர;களை மதித்தல் ஆகிய பண்புகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றன. நம்மைவிட வயதில் மூத்தவர;களுக்கு கண்ணியம் செலுத்த வேண்டும். அவர;கள் கூறும் நல்ல உபதேசங்களைக் கேட்க வேண்டும். மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. அதேபோல ஆசிரியர;களின் ஆசிகளைப் பெற்று, அவர;களின் சொற்படி நடந்துகொள்ள வேண்டும், அவர;கள் மகிழ்வுறும் விதமாக செயற்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

முதியோருக் குதவி செய்து
முன்னோனருளைப் பெற்று
மதிக்கும் நல்லாசான்களால்
மகிழ்வுறவே நீ வளர;வாய்

பக்கம் 09 இல் உள்ள அடிகளில் யாரையும் ஏமாற்றி வாழக் கூடாதென்றும்தீய பழக்கங்களான பொய்களவு ஆகியவற்றைப் புரியக் கூடாதென்றும் கூறப்பட்டுள்ளது. ஏழையாக வாழ்ந்தாலும் அடுத்தவர;களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவது பெருங் குற்றமாகும். அதற்காக கோழையாகவும் வாழ்ந்துவிடக் கூடாது. ஒருவன் குட்டுப்பட்டுக்கொண்டே இருந்தால் முன்னேற விடமாட்டார;கள். எனவே துணிச்சலுடன் வாழ வேண்டுமென்றும்உண்மை கூறும் உத்தமனாய் வாழ வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறாரமருதூர;ஜமால்தீன் அவர;கள்.

ஏழையாய் வாழ்ந்தாலும்
ஏமாற்றி சதிகள் செய்யும்
கோழையாய் வாழாமல்
குணக்குன்றாய் நீ வளர;வாய்

பொய் களவு மோசடிகள்
புரிந்த பெயரஇல்லாது
மெய்யுரைக்கும் சான்றோனாய்
மேன்மையுடன் நீ வளர;வாய்

பக்கம் 16 இல் உள்ள அடிகளில் திருக் குர;ஆனை மனனமிட்டுபடைத்த அல்லாஹ்விடம் பிரார;த்தனை செய்து வாழ வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் இணைத்து முஹம்மத் நபியவர;கள் நமக்குக் காட்டித் தந்த வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

அல்குர;ஆன் மனனமிட்டு
அல்லாஹ்விடம் துஆயிறைஞ்சி
நல்ல நபி வாழ்வெடுத்து
நாநிலத்தில் நீ வளர;வாய்

இறைதூதரபோதனையே
இவ்வுலகில் இகழ்ந்து நின்றோர;
கறைபடிந்து வீழ்ந்த கதை
கற்றுணர;ந்து நீ வளர;வாய்

உலகக் கல்வி, ஆன்மீகம் சார;ந்த விடயங்களை உள்ளடக்கியதாக தாலாட்டு எனும் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. உலகக் கல்வியைப் போன்றே மார;க்கக் கல்வியும் மிக முக்கியமாகும். அனைத்து மதங்களும் நல்ல விடயங்களைச் செய்யுமாறே ஏவி நிற்கின்றன. ஆன்மீக உணர;வு இல்லாததன் காரணமாக பல கலாசார சீரழிவுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து மீள்வதற்கு இவ்வாறான நூல்கள் மிகவும் துணை புரிகின்றன. நல்ல விடயங்களை வலியுறுத்துமுகமாக தாலாட்டு எனும் நூலை வெளியிட்ட கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்!!!

நூல் - தாலாட்டு
நூல் வகை - தாலாட்டுப் பாடல்
நூலாசிரியர; - மருதூரஜமால்தீன்
தொலைபேசி - 0775590611
வெளியீடு - தீன் ஜோதி இலக்கிய மன்றம்
விலை - 50 ரூபாய்

83. மரண வலிகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

மரண வலிகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

ஜீவநதியின் 40 ஆவது வெளியீடாக வெளிவந்துள்ள கவிதை நூலே மரண வலிகள் தொகுதியாகும். இந்த கவிதை நூலின் ஆசிரியரஅலெக்ஸ் பரந்தாமன் ஆவார;. இவரஏற்கனவே இதே பதிப்பகத்தினூடாக அழுகைகள் நிரந்தரமில்லை என்ற சிறுகதை நூலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறுகியகால இடைவெளிக்குள் அலெக்ஸ் பரந்தாமனின் இவ்விரண்டு தொகுதிகளும் வெளிவந்து அவரது இலக்கிய ஆற்றலைதிறமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

76 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்தக் கவிதை நூலில் சிறியதும் பெரியதுமான 63 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. யுத்த காலத்தில் ஏற்பட்ட துயரங்களையும், கொடுமைகளையும், யுத்தத்தின் பின்னர;ஏற்பட்ட விளைவுகளையும். கஷ்டங்களையும் வெளிக்காட்டும் படியான கவிதைகளே நூல் முழுவதுமாக விரவிக் காணப்படுகின்றன. போரின் முகத்தைக் காட்டி நிற்கும் கண்ணாடியாகவே இந்த நூலைப் பார;க்கலாம்.

வலிமிகுந்த வாழ்வைச் சுமந்து போரினால் மண்குழிக்குள் வரலாறாகிப்போன மக்களுக்கே அலெக்ஸ் பரந்தாமன் தனது கவிதை நூலை சமர;ப்பணம் செய்துள்ளார;.

அலெக்ஸ் பரந்தாமன் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார;. ‘‘எமை விட்டுக் கடந்துபோன போரின் உச்சத்துள்நிகழ்ந்த அவல தரிசிப்பில்என்னுள் எழுந்த மனக்கொதிப்பின் வெளிப்பாடுகளே இத்தொகுப்புக்குள் குந்தியிருக்கும் கவிதைகளாகும். ஒரு காலம்எமக்கான சுதந்திர தனியிருப்புக்காக எனது பேனா எழுதிய கவிதைகள் ஏராளம்! போரியல் வாழக்கைக்குள் புரிபடாத மனம் எதிர;பாராத திருப்பங்களோடும் நடுக்கங்களோடும் போன எனது வாழ்வின் பயணம்இறுதியில் (முள்ளி வாய்க்காலில்) நிர;க்கதியாகி நின்றபோது முன்பு முனைப்போடு எழுதிய கவிதைகள் உட்பட பல படைப்புக்கள் அனைத்தும் என்முன்னே எனைப் பார;த்து கைகொட்டி நகைப்பது போன்ற உணர;வுக்குள் சிக்கிச்சிதறி... மனம் குமைந்து அழுதழுது.. அகதி முகாமில் சரணடைந்தது ஒரு வலி மிகுந்த வரலாறாகும். அதன்பின் இனி எதுவும் எழுதுவதில்லை... என்ற ஒருவித வெறுப்போடு இருந்தபோது, மறுக்கப்பட முடியாத நிகழ்வின் தரிசனங்கள் ம(i)றக்கப்பட்டு விடும் எனும் ஒரு சிந்தனை என்னுள் உந்தவேமீண்டும் எழுத ஆரம்பித்தேன்.’’

இனி அவரது 63 கவிதைகளில் ஒரு சில கவிதைகளின் வேதனை வெளிப்பாட்டைப் பார;ப்போம்.

அவர;களும் எனது கவிதையும் (பக்கம் 01) என்ற கவிதை உயிர;களைஉடமைகளைப் பறிகொடுத்தவர;களின் இதய வேதனையை இயம்பியிருக்கின்றது. துன்பத்தின்போது கூடவே இருந்து ஆறுதல் கூறியவர;கள் இரத்தம் சிந்திஉடல் சிதறி இறந்துபோனதை கவிதை அழகாக சுட்டிக் காட்டியிருக்கின்றது.

எல்லோருக்குமான அவலம்தான்
முடிவில் அவர;களுக்குமாயிற்று
வாழவேண்டுமென்ற துளிர;ப்பும் துடிப்பும்
அவர;களை வழிமாற்றி
இன்னோரிடத்திலிருக்க வைத்தது..
கைகொடுத்துதவியது கைவேலி நிலம்
இடறல்களிலிருந்து
எட்ட வந்துவிட்டதான மன உணர;வோடு
அவர;கள் இருந்தார;கள் ஆறுதலாக...

மரண வலிகளை உணராது
மண்மடியில் அப்படியே
சிதறிய உடல்களாய்..
சிந்திய இரத்தமாய்..
மூச்சிழந்து முகம் மறைந்து போனதை
இனியும் நான் எப்படி எழுதுவேன்
எனது கவிதையில்?

யுத்தம் ஓய்ந்த பின்பும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர;களின் அவல வாழ்வுதுளிர;க்குமோ? (பக்கம் 05) என்ற கவிதையில் பதிவாகியிருக்கின்றது. தமது உடமைகளை விட்டுக் கொடுத்தவர;கள்அதன் பின்னரும் தமது சொந்த வீடுகளுக்குள் குடியேற முடியாத சூழ்நிலைகள் காணப்பட்டன. பதவிகளில் இருப்பவர;கள் தமது பதவிகளுக்காகவும்பேரபுகழுக்காகவும் பொய்களைக் கூறி தமது சகல காரியங்களை சாதித்துக் கொள்கின்றார;கள். அதனால் பொதுமக்களின் வாழ்வு அந்தரப்பட்ட நிலைமையிலேயே கழிகின்றது என்று இந்தக் கவிதை கூறி நிற்கின்றது.

போரஓய்ந்த பின்னிலையில் - வீடு
போய்ச்சேர வழியில்லை எங்கள்
ஊர;மனைகள் அழிந்த பின்பும்  - அங்கு
உழ்நுழையத் தெரியவில்லை ஆள
ஆரவந்து நன்மையென்ன - வாழ்வு
அவலமொரு தொடர;கதைதான் தங்கள்
பேரவாழ புகழோங்க - பொய்கள்
பேசுவதும் ஒரு கலைதான்!

அஸ்தமனத்துள் ஓரஅருணோதயம் (பக்கம் 15) என்ற கவிதையும் யுத்தம் பற்றியே பேசியிருக்கின்றது. காலம் விட்டுப்போன ரணங்களில் இன்னும் கசிந்துகொண்டிருக்கின்ற வாழ்வுத் துளிகள்பாதிக்கப்பட்டவர;களின் நிலைமை நன்றாக எடுத்துக் காட்டுகின்றன. செயற்பாடுகளை எல்லாம் முடக்கிப் போட்டுவருமானங்கள் யாவும் அடியோடு மறுக்கப்பட்டு வலுவிழந்தவர;களாய் அவர;களை மாற்றிப்போட்டது யுத்தம். இழந்து போனவற்றின் நினைவுகளின் வலிகளைத் தாங்கியபடி மீண்டும் புதிய வாழ்க்கையைத் தேடுகின்றார;கள் என்று கவிதையில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கவிதை வரிகள் இதோ..

பிணங்கள் விழுந்த தரைமீது படர;கிறது.. சூரிய தேவனின் பின்மாலைப்பொழுதின் ஒளி.. காலம் அள்ளிச்சென்ற சில நினைவுகளைத் தேடுகின்றேன் கழிவிரக்கத்தோடு.. கூற்றுவன் பெயரால் குறிக்கோளற்ற செயற்பாடுகள்.. வாழ்க்கையைத் தின்றுமுடித்துவிட்டு.. இப்பொழுது ஏப்பம்விட்டு நிற்கின்றன ஏதுமறியாதனவாக.. இழப்புகளின் சுமைகளைத் தாங்கியபடி.. எங்கெங்கோ பரவலாய்.. புதிய முளைகளாக விட்டெழும் முகங்கள்.. மீண்டும் வீரியத்தைத்தேடி விரைகின்றன.. தம்வழியில் விளக்கம் தெரிந்தனவாய்..

இடம்பெயர;ந்து வந்தவர;களின் வாழ்க்கைக் கனவுகள் யாவும் சிதைந்து போன நிலையில் அவர;களின் வளங்களும் உடற் பலங்களும் அழிந்திருந்தன. நிஜங்களின் தரிசனங்களாக அவர;கள் கண்டவை எல்லாம் கொடுமையான போரின் தாக்கங்கள் மட்டுமேயாகும். தலைவிதிகளின் நிர;ணயிப்புக்கள் தலைகீழாக எழுதப்பட்ட அந்த நிலைமையை ஓரஅகதியின் துயரப்பாடல் (பக்கம் 19) என்ற கவிதை விளக்கியிருக்கின்றது.

இன்னல்கள் எத்தனை கண்டாச்சு - வாழ்வில்
இடப்பெயர;வுகள் பலவாச்சு
வண்ணக் கனவுகள் சிதைஞ்சாச்சு - பெற்ற
வளங்கள் அனைத்தும் இழந்தாச்சு!

ஊரின் முகங்கண்டு நாளாச்சு - போரால்
ஒடுங்கிய வாழ்வும் இருளாச்சு
ஏரி வயல்வளம் அழிந்தாச்சு - எந்தன்
இல்ல முற்றமெல்லாம் என்னாச்சு?

வடுக்கள் (பக்கம் 52) என்ற கவிதை உறவுக்கார பேரனின் ஞாபகங்களை மீட்டுவதாக அமைந்திருக்கின்றது. பிஞ்சு விரல்களால் ஸ்பரிசித்த நினைவுகளில் கவிஞரநெஞ்சம் நெகிழ்ந்து போகின்றார;. மறப்போம் மன்னிப்போம் என்று சொன்னாலும் பேரனை மறக்க முடியாமல் தவிக்கும் கவிஞரின் இதயத்து வேதனை வாசகர;களிடத்திலும் ஒட்டிக்கொள்கின்றது.
அந்தக் கவிதை பின்வருமாறு:

வருடமொரு நாளில் பங்குனி மாத அமாவாசைக்கு முந்திய தசமிதியில் வந்து போகிறது உன் சிரார;த்த நினைவு.. மறப்போம் மன்னிப்போம் என்று கூறுகிறார;கள்.. மன்னித்துவிட்டேன்.. ஆனால் மறக்க முடியவில்லை உன் முகத்தை.. பேரன் என்ற உறவு முறையில் உன் பிஞ்சு விரல்களால் மூன்று வயதில் என் முகத்தைத் தடவி ஸ்பரிசித்த நினைவுகள் சிலது மட்டும் இப்பொழுதும் கூட நீரில் கல்லெறியப்பட்ட அலைகள் போல  ஷெல் விழுந்த ஓலைக் குடிசைக்குள் தீ திண்டு புலுண்டி உன் உடம்பு.. இப்பொழுதும் எரிகிறது உன் நினைவுகள் எனக்குள் மன்னித்துவிட்டேன் அவர;களை! ஆனால் மறக்க முடியவில்லை உன் முகத்தை.. உன் நினைவுகளை..!

போரினால் பாதிக்கப்பட்டு, அதன் வலிகளை சுமந்து, அந்த வலிகளை, மனதின் வேதனைகளை மொழிபெயர;த்து கவிதைகளாகவும், சிறுகதைகளாகவும் வெளிப்படுத்தியிருக்கும் அலெக்ஸ் பரந்தாமன் பாராட்டுக்குரியவர;. யுத்த காலத்தின் நிகழ்வுகளை அறிய இந்நூல் சிறந்த ஆவணமாகும். அவரது படைப்புக்களை இன்னும் எதிர;பார;த்து வாழ்த்துகிறேன்!!!

நூல் - மரண வலிகள்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர; - அலெக்ஸ் பரந்தாமன்
வெளியீடு - ஜீவநதி பதிப்பகம்
விலை - 300 ரூபாய்

Tuesday, March 3, 2015

82. சொல்லில் உறைந்து போதல் கவிதைத் தொகுதிக்கான இரசனைக் குறிப்பு

முல்லை முஸ்ரிபா இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்றில் பிறந்தவர். மர்கூம்களான முஹம்மது முஸ்தபா, ஸரிபா உம்மா தம்பதியின் இளைய புத்திரர். இக் கவிஞரின் மூன்றாவது கவிதைத்  தொகுதியாக சொல்லில் உறைந்து போதல் எனும் கவிதைத் தொகுதி அண்மையில் வெளிவந்திருக்கிறது. 2002 இளம் படைப்பாளிக்கான கௌரவ விருது, 2004 இல் தேசிய சாகித்திய விருது, 2004 இல் வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விருது, 2006 இல் வன்னிச் சான்றோர் விருது,  2010 இல் கொடகே தேசிய விருது, தேசிய சாகித்திய சான்றிதழ், வடமாகாண இலக்கிய விருது ஆகியவற்றையும், 2011 இல் யாழ் முஸ்லிம் இணையத் தளத்தின் மூத்த படைப்பாளிக்கான சிறப்பு விருது ஆகியவற்றை கவிஞர் முல்லை முஸ்ரிபா பெற்றுள்ளார்.

இவரது முதல் கவிதை நூல் இருத்தலுக்கான அழைப்பு என்பதாகும். இந்த நூல் 2003 இல் வெளிவந்தது. அதனைத் தொடந்து தனது இரண்டாவது கவிதைத் தொகுதியான அவாவுறும் நிலம் (2009) என்ற கவிதை நூலை வெள்ளாப்பு வெளியினூடாக வெளிக் கொணர்ந்திருக்கின்றார். என் மனசின் வரைபடம், எஞ்சியிருக்கும் சிறகுகளால் பறத்தல், மண்ணிறத்தவன் கவிதை ஆகிய நூல்களை கைவசம் வெளியீடு செய்வதற்காக வைத்துள்ளார். 

மொழித்துறை விரிவுரையாளராக, முதன்மை ஆசிரியராக, இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளராக, பத்தி எழுத்தாளராக, கவிதைத் திறனாய்வாளராக தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் இக்கவிஞரின் முதல் தொகுதியிலுள்ள மீதம் என்ற கவிதை க.பொ.த. சாதாரணதர தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது இவரது ஆளுமையை வெளிக்காட்டுவதாய் அமைந்திருக்கின்றது.

காலமும் காலநிமித்தமுமாக உயிர்த்தெழும் கவிதைகளாகவே சொல்லில் உறைந்து போதல் கவிதை நூலில் உள்ள கவிதைகள் அமைந்துள்ளன. வெள்ளாப்பு வெளியினூடாக வெளிவந்துள்ள இந்த நூலில் 59 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன.

கவிதைகள் குறித்த இன்பத்தை, அதன் ரசனையைத் தூண்டும் விதமாக எழுதுவதில் கவிஞர் முல்லை முஸ்ரிபா தனித்துவமானவர். அவர் அடையாளப்படுத்தும் கவிதைகளின் கரு ஒவ்வொன்றும் அன்றாட வாழ்க்கையில் நாம் கண்டுவிட்டு ஒதுங்கிப் போகும் சின்னச் சின்ன விடயங்களே. அவ்வாறான வாழ்வியல் நடைமுறை குறித்த பார்வையை அழகியல் சார்ந்த கவிதைகளாக எழுதி சொல்லில் உறைந்து போதல் என்ற தனது மூன்றாவது கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கின்றார் கவிஞர் முஸ்ரிபா.

உயிர்ப்பு 1 (பக்கம் 01) என்ற கவிதை ஊர் பற்றிய தனித்துவத்தை நெஞ்சில் விதைக்கின்றது. பொதுவாக யாரும் ஊரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மண் வாசனை என்ற ஒரு பொதுப் பண்பு கொண்டு மனிதர்களின் குணங்கள்; அளிவிடப்படுகின்றன. வௌ;வேறான வாழ்க்கை முறைகள், சம்பிரதாயங்கள், கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள் இடத்திற்கிடம் மாறுபடும். ஒவ்வொருவருமே தத்தம் உயிருக்கு நிகராக ஊரையும் நேசிப்பார்கள். கவிதையில் வருகின்ற உம்மம்மாவும் அப்படித்தான் என்பதை கீழுள்ள வரிகள் இயம்புகின்றன...

உம்மம்மாவின் கண்கள்
குழி விழுந்து பஞ்சையாயின
அருகிலிருக்கும் பொருளையோ குரலையோ
அடையாளம் காண முடிவதில்லை அவளால்
ஆனாலும்
ஆலச் சந்தடியில் தொடங்கி
அதனது உயிர்ப்புச் சிதறாமல்
ஊரினது வரைபடத்தை முழுதாய்
கவ்வியிழுத்து வருகின்ற
அவளது முகத்திலும் அகத்திலுமான
உணர்வின் ரேகைகள்
என் கண்களுக்குள் வெளியாயின!

வாழ்வாதாரத்தை தேடும் வழிகளில் வியாபாரத்தின் பங்கு மிக முக்கியமானது. விசாலமான கடைத் தொகுதியை வைத்திருப்பவன் தொடக்கம், பாதையில் கூவிக்கூவி பொருட்களை விற்பவன் வரைக்கும் பணத்தின் தேடலே குறிக்கோளாக இருக்கின்றது. காலத்தைக் கூவுபவன் (பக்கம் 02) என்ற கவிதையின் தலைப்பே ரசிக்கத்தக்கதாக இருக்கின்றது. நாள் முழுவதும் கூவிக்கூவியே பொருட்களை விற்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு வியாபாரி காலநிலை மாற்றங்களைக் கண்டுகொள்வதில்லை. மெய் வருத்தம் பார்த்துப் பார்த்து உழைக்காமல் இருப்பதில்லை. அல்லது உழைக்கும் காசை எல்லாம் ஊதாரித்தனம் செய்து விடுவதுமில்லை. மாறாக அவனுக்கு வலியோ, வியாதியோ, களைப்போ ஏற்படும்போது தன் குழந்தையரை நினைத்துக்கொள்கின்றான். அவர்களது வதனம் அவன் நினைவுகளில் நிழலாடும் வேளைகளில் அவன் அயர்ந்துவிடாது தன் உழைப்பே குறியாக இருக்கின்றான் என்பதனால் ஆகும். அந்தக் கவிதை இப்படி விரிகிறது..

வியாபாரத்தைக் கூவுபவன்
வியர்வையால் நிரம்பியிருக்கிறான்
நம்பிக்கைச் சுடர் கண்களிலெரிய
நாளைக்கான நிமிசத்தை விதைக்கிறான்
அயர்ந்து போகும் ஜீவிதப் பிடிப்பை
தன் மதலையரின் 
சிரிப்பொலி கொண்டு களிப்புறுகிறான்
குழந்தையரின் ரூபம்
தன் வரைபடத்தில் விரிய
வியாபாரத்தை உற்சாகமாய் கூவியபடி
மீண்டும் மீண்டும் அலைகிறான்
அவனது கூடையில் வழிகிறது
இல்லாமையின் உள்ளமை!

குறிப்பிட்டதொரு இனம் குறித்த ஆதாரங்கள் அடியோடு அறு(ழி)க்கப்படுவதற்கான சூழ்நிலைகள் ஒரு மிகுந்திருந்த காலத்தில் கண்டல் காட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட முகவரி தொலைத்த சில உள்ளங்களுக்காக எழுதப்பட்ட கவிதை மனம் கண்டல்காடு (பக்கம் 24) ஆகும். இலங்கையின் வரலாறுகளை இரத்தக் கறைபடியச் செய்த சோக நிகழ்வுகள் நிறையவே இருக்கின்றன. அதிலொரு துளியென இக்கவிதையைக் கொள்ளலாம். ஆயுததாரிகளை குரங்களுக்கு ஒப்பிட்டு எழுதப்பட்டிருப்பதானது, அவர்கள் பற்றிய அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக காணப்படுகின்றது. யாரோ இரண்டு கோஷ்டிகளின் மோதல்களுக்கு பலிக்கடாவாக ஆக்கப்படுவதெல்லாம் அப்பாவிப் பொது மக்களே என்பதற்கு வரலாறு சாட்சி. அந்த பொதுமக்கள்தான் முகாம்களிலும், குடில்களிலும் வசிக்க உந்தப்படுகின்றனர். அடிப்படை வசதிகள் எதுவுமே அற்று வாழ்கின்ற வாழ்க்கையில் நிம்மதியற்று தவிக்கும் இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் சொகுசு வாழ்க்கைதான் வாழ்ந்திருப்பார்கள். இம்சித்தலின் வலி இந்தக் கவிதைகளில் இப்படி வியாபித்திருக்கின்றது..

அதிபொழுதொன்றில்
எங்கள் பூர்வீகத்தினுள் புகுந்தன கருங்குரங்குகள்
வேரோடிய நம் சுவடுகளை 
அழித்தலின் வெறி
குரங்கு முகங்களில் வழிந்தன
....
ஆதி ரத்தத்தில் புரித்த நிலத்தின் மீதென
அராஜகக் கொடூரம் படரவும்
கண்களுக்குள் முள் ஏறிற்று
மீளவே முடியாச் சோகம் பெருந்துயர்
தீயிட்டதில் சாம்பலானது
...............

தம்மைப் பற்றிய சுய விமர்சனத்தை செய்யாதவர்கள் மற்றவர்களின் பிழை பற்றி தாராளமாகக் கதைப்பார்கள். தன்னைத் திருத்திக்கொள்ள வழியற்றவர்கள் பிறரின் குறைகளைக் களைதல் பற்றிய நுணுக்கத்தை கற்றுக் கொடுப்பார்கள். அதே போல தத்தம் வழ்வில் பல புதிர்கள் இருக்கையில் அதை விடுவிக்கும் முயற்சிகளைச் செய்யாமல் மற்றவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்த ஆய்வுகளைச் செய்வதில் நேரத்தை செலவழிப்பார்கள். இது பற்றி கவிதை வாழ்தல் எனும் புதிர் (பக்கம் 35) என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் விடுகதைகளுடன் அலைகிறார்கள்
அவரவர்களின் கதைகளை அவிழ்ப்பதற்கு
அவரவரால் முடிவதேயில்லை
முயன்று தோற்கிறவர்கள்
மற்றவர்களின் புதிர்களை
நொடிக்குள் அவிழ்த்துப் போடுகிறார்கள் 
ஆச்சரியம்
இன்னும் தான் முடிவதில்லை
தம்மை
விடுகதைகளிலிருந்து விடுவிப்பதற்கு

தவிப்புறுபவர்களின் மேல்
மேலும் மேலும் வியாபிக்கின்றன விடுகதைகள்!

தன்னைப் பாதித்த விடயங்கள், சமுதாய விழிப்புணர்வுகள், மக்களின் துயர்கள், வாழ்வின் மாயத் தோற்றங்கள் பற்றிய கருக்களுடன் இன்னும் பல்சுவை அம்சங்களை கருவாகக் கொண்டு அழகியல் பாங்கில் ரசிக்கத்தக்க கவிதைகளைத் தரும் கவிஞர் முல்லை முஸ்ரிபாவுக்கு என் வாழ்த்துக்கள்!!!

நூல் - சொல்லில் உறைந்து போதல்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - முல்லை முஸ்ரிபா
வெளியீடு - வெள்ளாப்பு வெளி
விலை - 300 ரூபாய்

Saturday, February 28, 2015

81. வீடு நாவல் பற்றிய இரசனைக் குறிப்பு

வீடு நாவல் பற்றிய இரசனைக் குறிப்பு

தென்னிலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் மிக முக்கியமான எழுத்தாளராக விளங்கும் திக்வல்லை கமால் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் தனது பெயரை ஆழப்பதித்தவர். சாஹித்திய விருதுகள் உட்பட பல பரிசுகளை பெற்றுள்ள இவர், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், வானொலி நாடகங்கள், சிறுவர் இலக்கியங்கள் போன்ற துறைகளில் முனைப்புடன் செயல்பட்டு பல நூல்களை இலக்கிய உலகுக்கு தந்துள்ளார். அதுபோல் மொழியெர்ப்பு துறைகளிலும் ஈடுபட்டு பல நூல்களை பெயர்ப்பு செய்துள்ளார்.

திருமணம் என்பது ஆடம்பரத்துக்காகவும், புகழுக்காகவும் நிகழ்த்தப்படும் காலம் இது. யதார்த்தங்களைத் தொலைத்துவிட்டு மாயையகளுக்குள் ஒளிந்து கொள்ளவே பலரும் பிரியப்படுகின்றனர். சமகால நிகழ்வுகளின் ஓட்டத்தில் காசு பறிக்கும் ஒரு தொழிலாகவே திருமணத்தைப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் சராசரி ஆண்களில் இருந்தும் மாறுபட்டு பெண் வீட்டிலிருந்து ஒரு சதமும் சீதனம் எடுக்காமல் அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்துடன் திருமணம் முடிக்கும் கரீம் மௌலவி பற்றிய கதைப் பிண்ணனிதான் வீடு என்ற இந்த நாவல்.

வீடு என்ற ஒற்றை வார்த்தையில் ஒரு தனிமனிதனின் போராட்ட வாழ்க்கை மிக அழகாக அற்புதமாக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. நமது சமூகத்தைப் பொறுத்தளவில் மௌலவி என்பவர்கள் வசதி வாய்ப்பற்றவர்கள்.. நன்றாக படிக்காதவர்கள் என்ற எண்ணப்பாடு அதிகமாக காணப்பட்ட போதிலும், அல்லாஹ்வின் தீனைக் கற்றவர்கள் என்ற அந்தஸ்து உரியவர்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.

மகனுக்கு பட்டமளிப்பு விழா நடக்கவிருப்பதால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் பெற்றோரான முஜீன் நானாவும், நஜிமுன்னிஸாவும். தமது மகன் மௌலவியாகப் போகும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை. மௌலவி கரீம் அவர்கள் ஊருக்குள் வருகையில் ஊரே கூடி நின்று மௌலவியையும் அவரது தந்தையான முஜீன் நானாவையும் பள்ளிவாயலுக்கு அழைத்துப்போய் பாராட்டி கௌரவிக்கின்றார்கள். வேறு ஊர்களில் இருந்தெல்லாம் வந்து தங்கள் ஊர் பள்ளியில் கரீம் மௌலவி தொழில் செய்ய வேண்டும் என வினயமாக கேட்டுக்கொள்கின்றார்கள். அப்போதெல்லாம் மௌலவியின் பெற்றோருக்கு பெருமிதமாக இருந்தது. ஆனாலும் ஊர்ப் பள்ளியை விட்டுவிட்டு வேறு பள்ளிகளில் தொழில் செய்வதை நியாயமாகக் கருதாமையினால் ஊர்ப் பள்ளியிலேயே உதவி  ஹஸரத்தாக கரீம் மௌலவி இருக்கின்றார். 

இருபத்தைந்து வயதான மௌலவியைக் குறிபார்த்து பல இடங்களில் இருந்தும் திருமண அம்புகள் பாய்ந்து வந்தன. ஆறுமாத சேவையில் அவரது மதிப்பு எங்கும் பரவியிருந்தது. எனவே மௌலவிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்கின்றார்கள். மௌலவி சீதனமாக எதையும் எதிர்பார்க்காமல் திருமணம் செய்துகொண்டதை அனைவரும் பெருமையாக பேசிக்கொள்கின்றார்கள்.

முஜீன் நானாவுடைய அந்தச் சிறிய வீட்டில் தற்போது இரண்டு குடும்பங்கள் வசிக்கத் தொடங்கிவிட்டன. இடப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் பொறுத்துப்போக வேண்டிய நிலைமையில் அனைவரும் இருக்கின்றனர். வெளியில் சீதனம் தேவையில்லை என்று சொல்லிக்கொண்டு உள்ளுக்குள் சுளைசுளையாக வாங்குபவர்கள் மத்தியில் கரீம் மௌலவி உண்மையில் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்வதை,
  
'இந்த நகநட்டு எங்களயன் அம்ரிதா?' அவர் வியந்து போய்தான் கேட்டார்.

'ஏன்டதான்' அவளுக்கு அந்தக் கேள்வியே ஆச்சரியமாகவிருந்தது.

'ஒங்கடயென்டா?'

என்ன கேட்கிறாரென்று அவளுக்கு தெளிவாக விளங்கிவிட்டது.

'இது கலியாணத்துக்கு எடுத்ததில்ல. நான் தையல் வேல செஞ்சி ஒன்டொன்டா வாங்கினது'

'மெய்யா நான் பயந்த அம்ரிதா. ஒன்டும் எடுக்கியல்லயெண்டு சொல்லிப்போட்டு..'

எனும் வரிகளினூடாக விளங்கிக்கொள்ளலாம். எல்லோருக்கும் சமைத்துப்போட வேண்டிய பொறுப்பு நஜிமுன்னிஸாவுக்கு சுமத்தப்படுகின்றது. அது அவளுக்கு பிரச்சினையே இல்லை. வீட்டில் பொருட்கள் இருந்தால் சட்டியில் வேகும். ஆனால் அதுதான் இல்லையே. மௌலவி தனியாளாக இருந்தபோது கிடைத்த வருமானம் அவர் குடும்பமான பிறகு போதவில்லை.
இது தொடர்பாக மகனிடம் பேசுவதில் எந்தவித பிரச்சினையும் இல்லாதிருந்தபோதும் மருமகளுக்குத் தெரியாமல் பேசுவதில்தான் சிக்கல் இருந்தது. எனவே தருணம் பார்த்து முஜீன் நானா மௌலவியிடம் இவ்வாறு கூறுகின்றார்.

'மகன் இப்ப பதினஞ்சி வருசத்துக்கு முந்தீம் ஹஸரத்துக்கு பத்தாயிரம்தான் சம்பளம் குடுத்தாங்க... ம்.. இப்பேம் அதே கணக்கா.. ஜாதியாயீக்கும். சாமான் சட்டீட வெளக்கி எப்பிடியன் காலம் போற. கூட்டிக் கேக்காம சரிவராது... நான் வாய் போடியது சரில்ல...'

இதைக் கேட்ட மௌலவியும் ஷநானும் யோசிச்சி யோசிச்சி நின்ட விசயம்தான் வாப்பா. நான் இன்டக்கி நாளெக்கே பெரிய மத்திச்சத்தப் பெய்த்து சந்திக்கியேன்| என்கிறார்.

ஆனால் மௌலவியின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமடைகின்றன. பெரிய மத்திச்சம் வெட்டொன்று துண்டிரண்டாக ஷஊர் வருமானம் இல்லாப் போனதுக்கு எங்களுக்கு ஒன்டும் செய்யேல. சம்பளம் பத்தாயிரம்தான் தரேலும்| என்கின்றார்.

இவ்வாறு நாட்கள் நகர்ந்து செல்ல மௌலவியின் மனைவி அம்ரிதா கர்ப்பமடைகின்றாள். அவளது பெற்றோரும் மௌலவியின் பெற்றோரும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர். இந்தச் சந்தரப்பத்தில் நஜிமுன்னிஸா சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் சாதுரியமாக இப்படிச் சொல்லிவிடுகின்றாள்.

'ஓ இனி அல்லா லேசாக்கி வெக்கோணும். உம்ம வாப்பாமாருதான் கிட்டேக்க நின்டு பாக்கக் கேக்கோணும்'

இது அம்ரிதாவின் தாயான ஐனுள் மர்லியாவுக்கு சுள்ளென்று தைத்தது. மகளை மட்டுமா பார்க்க முடியும்? மருமகனையும் சேர்த்தல்லவா பார்க்க வேண்டும்?

'எங்கட புள்ளய நாங்க கையுடுகியல்ல' என்று அம்ரிதாவின் தந்தையான பக்கீர் நானாவும் விட்டுக்கொடுக்காமல் பேசுகின்றார்.

இதற்கிடையில் மௌலவியின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கும் விடயமும் தொடங்கிவிட்டது. தாய் தந்தையரின் ஆசைப்படி தங்கைக்கு நல்லதொரு மணமகன் கிடைக்க வேண்டும். அதனால் மௌலவியோடு ஒன்றாக ஓதி, மத்ரஸா காலங்களில் சீதனமில்லாமல் திருமணம் முடிப்போம் என்று முழங்கிய அவரது தோழரான தாரிக் மௌலவியை தங்கைக்கு மணமகனாக்கும் யோசனையில் தாரிக் மௌலவியை சந்தித்துப் பேசுகின்றார் கரீம் மௌலவி.  'இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்' என்கிறார் தாரிக். ஆனால் அவருக்கு வேறொரு இடத்தில் திருமணம் நடந்துவிடுகின்றது.

இப்படியிருக்க அம்ரிதா தாய் வீட்டுக்குச் சென்று கொஞ்ச நாட்களில் அவளுக்கு குழந்தை கிடைத்துவிடுகின்றது. உறவினர்கள் வந்து பார்ப்பதும் போவதுமாக இருந்தார்கள். மகளும் மருமகனும் தங்கள் வீட்டில் தொடர்ந்து இருந்துவிடுவார்களோ என்பது பற்றி மர்லியாவும் பக்கீர் நானாவும் குசுகுசுக்கத் தொடங்கினார்கள். அதுபற்றி அம்ரிதாவின் தலையிலும் போட்டுவிடுகின்றார்கள். சீதனம் வேண்டாம் என்று அம்ரிதாவை மணமுடித்துவிட்டு அம்ரிதா தன் பெற்றோர் வீட்டில் தங்கிவிடுதல் முறையில்லை அல்லவா?

இதுபற்றி பக்குவமாக அம்ரிதா கரீம் மௌலவியிடம் கூற, அவரும் நாற்பதாம் நாள் விருந்து முடிந்த கையோடு தங்கள் வீட்டுக்கு போய்விடலாம் என்று எதுவுமறியாமல் கூறுகின்றார். 
காலம் நகர்கிறது. மௌலவியின் தங்கைக்கும் திருமணம் நடக்கின்றது. அதற்காக அம்ரிதா தனது நகைகளை விற்று காசு கொடுத்து உதவுமாறு கரீம் மௌலவியிடம் கூறுவதினூடாக அவளது சிறந்த பண்பு மேலோங்குகின்றது. 

மௌலவிக்கும் வருமானம் போதவில்லை. ஆதலால் காலியில் இருக்கும் ஒரு பள்ளிவாசலுக்குப் போவதாக முடிவெடுக்க அனைவரும் அதை ஆமோதிக்கின்றனர். பள்ளி நிர்வாகத்தினரிடம் பேசிப் பார்த்ததில் சம்பளம் உட்பட அவரது மனைவி பிள்ளை வந்து தங்கக் கூடிய தங்குமிட வசதியும் செய்து கொடுக்கப்படுகின்றது.

திடீரென நஜிமுன்னிஸாவுக்கு உடம்புக்கு முடியாமல் போகின்றது. எனவே கரீம் மௌலவியை ஊரோடேயே தங்கிவிடுமாறு அவரது தாய் கேட்டுக்கொள்கின்றாள். அவருக்கும் அதுவே சரியாகப்பட்டது. ஆனாலும் தங்கையின் குடும்பம் அங்கிருப்பதால் தங்குவதற்கான சிக்கல்கள் ஏற்பட்டது. ஆகவே கூலிக்கு வேறொரு வீடு பார்த்துக்கொண்டு போகும் வரை தனது மாமாவான பக்கீர் நானாவின் வீட்டிலும் தகப்பனின் வீட்டிலும் மாறி மாறித் தங்குவதாக முடிவெடுக்கப்பட்டது. இதன்போது இரண்டாவது குழந்தையும் கிடைத்துவிடுகின்றது.

தனது சம்பளம் குடும்பத்தைக் காப்பாற்ற போதவில்லை என்பதால் வியாபாரம் செய்யத் தலைப்படுகின்றார் கரீம் மௌலவி. அது ஓரளவுக்கு சுதந்திரமாகவும், வருமானம் கூடியதாகவும் இருப்பதால் அவருக்கு பிடித்துப் போகின்றது.

பக்கீர் நானா இருப்புக்கொள்ளாமல் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருப்பதை ஐனுள் மர்லியா காண்கின்றாள். அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்று அம்ரிதாவுக்கு விளங்கவில்லை. தங்கையிடம் கேட்கிறாள். அவளுக்கும் தெரியவில்லை என்கிறாள். பிறகு தந்தை இப்படி கடுமையாக இருப்பதற்குக் காரணம் என்னவென்று ஐனுள் மர்லியா கூறும் கூற்று வாசகரை அதிர்ச்சியுறவும், சமுதாயம் பற்றி சிந்திக்கவும் வைக்கின்றது.

'இல்ல மகள்.. ஊடு தேடிக்கொண்டு போற.. ஆங்காட்டிம் இங்கேம் அங்கேமா நிக்கியென்டேன் சென்ன. இப்ப ஒரு வருசம் பிந்தீம் ஊடு தேடல்லயாண்டு வாப்பா என்னத் தின்னப் போற...'
இதைக் கேட்ட அம்ரிதாவுக்கு மிகவும் கவலையாகின்றது. கணவனிடம் பக்குவமாகக் கூறி குறைந்த கூலிக்கு, சரியாக வேலை பூரணப்படுத்தப்படாத வீடொன்றுக்கு அவசரமாக  செல்கின்றார்கள். 

வருடங்கள் கழிகின்றன. கரீம் மௌலவியின் மகள் பெரிய மனுசியாகின்றாள். இப்போது அந்த சுமையும் மௌலவிக்கு கூடிவிட்டது என்றவாறு கதை முடிவடைகின்றது.

எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது இதற்குத்தான். சொந்த பிள்ளைகளே என்றாலும் திருமணம் முடித்த பிறகு அவள் வளர்ந்த வீடு ஷதாய் வீடு| தானே தன் வீடல்ல. அதே போல ஆண் பிள்ளை என்றால் வேறொரு வீடு பார்த்துக்கொண்டு மனைவி மக்களை அழைத்துக்கொண்டு போய்விட வேண்டும். இல்லாவிட்டால் எல்லா இடமும் பிரச்சினைகள் தலை தூக்கவே செய்யும். 

வீடு இல்லாவிட்டால் எப்படியெல்லாம் மற்றவர்களிடம் தலைகுனிய வேண்டி வரும் என்பதை மிக தத்ரூபமாக விளக்கிக் காட்டுகின்றார் திக்குவல்லை கமால் அவர்கள். சமுதாய பிரச்சினைகள் தன் படைப்புக்களினூhக வெளிப்படுத்தியும், ஊர் பாஷையை அழகாக உட்செருகி இலக்கியம் படைத்தும் வரும் அவரை மனமார வாழ்த்துகிறேன்!!!

நூல் - வீடு
நூல் வகை - நாவல்
நூலாசிரியர் - திக்குவல்லை கமால்
வெளியீடு - கலாசார அலுவல்கள் திணைக்களம்
விலை - குறிப்பிடப்படவில்லை